• Jun 14 2026

மனோஜ் மைண்டில் இப்படி ஒரு விஷயம் ஓடுதா.? விஜயாவுக்காக மீனா செய்த காரியம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவும் மீனாவும் விஜயாவை வந்து மனோஜின் ஷோரூமில் சந்திக்கின்றனர். மேலும், இங்கு எத்தனை நாளைக்கு இருப்பீங்க, வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றனர். ஆனாலும் விஜயா, “நான் வரமாட்டேன்” என்று பிடிவாதமாக இருக்கின்றார்.

இதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம், விஜயாவை எப்படியாவது அழைத்து வருமாறு கூறுகின்றனர். ஆனாலும் அவர், “என்னை அவர் மதித்து இருந்தால் இப்படி பிரச்சினை வந்திருக்காது” என்று சொல்லி அங்கிருந்து சென்று விடுகின்றார்.

ஆனால் அடுத்த நாள் விஜயாவுக்கு உடம்பு சரியில்லாமல் மனோஜின் ஷோரூமில் இருக்க, அண்ணாமலை அங்கு சென்று விஜயாவை நலம் விசாரிக்கின்றார். மேலும், மருந்து எடுக்க வருமாறு அழைக்கின்றார். அந்த நேரத்தில் முத்துவும் வருகின்றார். அதற்கு பின்பு மீனாவும் அங்கு வந்து விடுகின்றார்.


பின்பு மீனாவும் வீட்டில் இருந்து காபி கொண்டு வந்து விஜயாவுக்கு கொடுக்கின்றார். முதலில் வேண்டாம் என மறுத்தவர், அதற்கு பின்பு அதை வாங்கி குடிக்கின்றார்.

அத்துடன் மீனாவும் முத்துவும் வீட்டிற்கு வருமாறு அழைக்கின்றனர். “அங்கு எந்த வசதியும் இல்லை என்றாலும் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வோம்” என்று கூறுகின்றார்கள். மனோஜ், “அம்மா போனால் தான் ரோகிணி வருவார்” என்று மனதுக்குள் எண்ணுகின்றார்.

அதே நேரத்தில், விஜயா  ஷோரூம் இல் தங்கி இருப்பதால் பிசினஸ் அடிபடுவதாக பேசுகின்றனர். பொருட்களை ஆர்டர் செய்த கஸ்டமர்களும் மீண்டும் ரிட்டன் பணத்தை கேட்பதாக சந்தோஷும் ஜீவாவும் கூறுகின்றனர். இதனால் விஜயா யோசிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.




Advertisement

Advertisement