• May 15 2026

ப்ளாக்பஸ்டர் என மார்தட்டும் படக்குழு... உண்மையில் தியேட்டர் நிலவரம் என்ன?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம், முதலில் மே 14ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் ஒரு நாள் தாமதமாக மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான உடனேயே படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சூர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வலுவான திரையரங்கு வெற்றி கிடைத்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


இந்த வெற்றியால் முழு படக்குழுவும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. இயக்குநர் RJ பாலாஜி, இந்த வெற்றிக்கு எல்லைச்சாமி கருப்பனுக்கு நன்றி தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவு ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. மேலும், படம் வெளியான முதல் நாளில் RJ பாலாஜி தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

திரையிடலின் போது ரசிகர்கள் கொடுத்த உற்சாகமான வரவேற்பைப் பார்த்து அவர் உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. படம் முடிந்ததும் அவர் ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதற்கிடையில், RJ பாலாஜி தனது X பக்கத்தில் “BLOCKBUSTER responseக்கு நன்றி.. கருப்பா கூட வந்து தெறிக்கவிட்டுடப்பா..!” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு சூர்யா ரசிகர்கள் பலரும் நன்றி தெரிவித்து, படக்குழுவை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. படம் தற்போது தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடுகிறது.

Advertisement

Advertisement