நரேந்திரமோடி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சிக்கன வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து பேசினார். அப்போது பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும், தங்கம் வாங்குவதை சில காலத்திற்கு தள்ளிப்போட வேண்டும் என்று மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த பேச்சு நாடு முழுவதும் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

இந்த சூழலில், நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை கடிதம் மூலம் வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார். பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை ஆலோசனையை ஆதரிக்கும் வகையில், தமிழ் திரைப்படத் துறையினர் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளை குறைத்து, இந்தியாவிலேயே அதிகபடியான படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் ஏராளமான அழகிய சுற்றுலா தளங்களும், தொழில்நுட்ப வசதிகளும் உள்ள நிலையில், வெளிநாடுகளுக்குச் சென்று அதிக செலவில் படப்பிடிப்பு நடத்துவது தேவையற்றதாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க, மற்றொரு பகுதி இது சினிமா துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
Listen News!