மலையாள சினிமாவில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை மமிதா பைஜு, தற்போது தென்னிந்திய திரையுலகில் மிகவும் கவனம் பெறும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
இயல்பான நடிப்பு, அழகான முகபாவனை மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் மூலம் ரசிகர்களை ஈர்த்த அவர், தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.குறிப்பாக, ‘டியூட்’, ‘ஜனநாயகன்’, ‘கர’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மமிதா பைஜு பகிர்ந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் பேசுகையில், “என்னுடைய ரசிகர்களின் நினைவில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆசை.
ஒரு நாள் என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது, நான் எடுத்த பயணம் எனக்கு மகிழ்ச்சி, நிம்மதி, திருப்தி தர வேண்டும். அதற்காகத் தான் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.” என்று கூறினார்.
மேலும், “சினிமா வெற்றியைத் தாண்டி, ஒரு அன்பான குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதும் என் கனவுகளில் ஒன்று.” என மனம் திறந்து பேசியுள்ளார். மமிதாவின் இந்த எளிமையான மற்றும் உணர்ச்சிபூர்வமான பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Listen News!