• May 16 2026

அடேங்கப்பா! விஜய்யை நேரடியாக டார்கெட் செய்யும் பவன் கல்யாண்..சூடுபிடிக்கும் அரசியல்களம்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் ஒரு தகவல் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்று தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார். 


இதையடுத்து, கட்சி தொடங்கி மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சராக உயர்ந்ததாக விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

மேலும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், அரசியல் முன்னேற்றங்களை ஒப்பிடுவது சரியானது அல்ல என்றும் அவர் தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement