ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி தொடர்பான விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் சூடான விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஆர்த்தி கவனித்து வந்ததாகவும், ரவி மோகன் தனது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கெனிஷா தன் மீது தொடர்ந்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறி, “நான் ரவியை விட்டு விலகுகிறேன், சென்னையை விட்டு வெளியேறுகிறேன்” என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தாய் சிங்கத்தை சீண்டாதீர்கள். உண்மை எப்போதும் வெல்லும்” என மறைமுகமாக பதிவு வெளியிட்டிருந்தார். அதற்கு குஷ்பூவும் லைக் பண்ணி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இவ்வாறான நிலையில், இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆர்த்தியின் உறவினரான பிரசாத் என்பவரையும் ரவி மோகன் அழைத்து வந்திருந்தார். இது மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.
இதன்போது பேசிய ரவி, “இவரும் அந்த குடும்பத்தில் மாப்பிள்ளையாக இருந்தவர். அவர் கூட அங்கிருந்து வெளியேறிவிட்டார். இன்னைக்கு எனக்காக வந்திருக்கிறார்” என ரவி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரசாத், “ரவி சொல்வது உண்மைதான்” என கூறியதும், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!