தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்பட்டு ரவி மோகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாகவே வைரலாகி வருகின்றன. இவர் எந்த ஒரு கிசுகிசு தகவல்களிலும் சிக்காத நல்ல நடிகராக இருந்தார். ஆனாலும் தற்போது இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சைகள் சூழ்ந்து வருகிறது.
நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கு பின்பு ரவி, ஆர்த்தியை விவாகரத்து செய்ய காரணம் அவருடைய நெருங்கிய தோழி கெனிஷா தான் என பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
எனினும் ரவி மோகன் இது தொடர்பில் எந்த விளக்கமும் கொடுக்காமல் கெனிஷாவுடன் பொதுவெளியில் செல்வது, கோவில்களுக்கு ஒன்றாக செல்வது, பொது மேடைகளில் பாடி ஆடி மகிழ்வது, கைகோர்த்து நடப்பது என மகிழ்ச்சியாக இருந்து வந்தார்.
இதை தொடர்ந்து நேற்றைய தினம் கெனிஷா நான் இனி ரவி விஷயத்தில் தலையிட மாட்டேன், இந்த ஊரைவிட்டு போகின்றேன், நான் யாருடைய வாழ்க்கையும் கெடுக்கவில்லை என உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுவரை காலமும் மௌனம் காத்த ரவி மோகன் ஆவேசத்துடன் பேசிய வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதன்படி அவர் கூறுகையில், கெனிஷாவ காலி பண்ணி அனுப்பிட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ். ஆனா அதுக்காக எல்லாம் நான் இன்டர்வியூலாம் வைக்கல. அவங்க எங்க இருந்தாலும் நல்லாதான் இருக்கணும். அவ்வளவுதான் வேற எதுவுமே இல்ல.
எனினும் நீங்க எல்லாரும் சைபர் புல்லிங். இது எல்லாவற்றையும் நான் சும்மாவே விட போறதுல்ல.என் அண்ணனுக்கு நடந்திருந்தாலும் தம்பிக்கு நடந்ததுனாலும் நான் இதுதான் பண்ணுவேன்.
வீட்ட விட்டு நான் எதுவுமே இல்லாம வந்தவன். இப்ப நான் வாடகை வீட்டுல இருக்கறேன்.அவங்க எல்லாரும் நல்லாதான் இருக்காங்க. கோடிக்கணக்கான காட்டுன வீட்ல நல்லாதான் இருக்காங்க. ஒரு மனுஷனை நிம்மதியா வேலை செய்ய விடணும்.எனக்கு செலிபிரிட்டி இமேஜ் தேவை இல்லை.
மனுஷன் முதல்ல நான் ஆம்பள பொம்பளல்லாம் அப்புறம் மனுஷன். ஒரு மனுஷனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது அப்ப மட்டும்தான் தெரியும் அவன் கூட யார் இருப்பாங்கன்னு.
கெனிஷா எப்படி வளர்ந்தவங்க தெரியுமா. ஒரு பொண்ணு என்ன புரிஞ்சுக்கிச்சு.. ஏன் நான் பாக்காத ஹீரோயினாங்க. என் வேலையே அழகான பெண்கள் கூடதான் நடிக்கிறது.. அதுதான் என் வேலை என தெரிவித்துள்ளார்.
Listen News!