• Apr 16 2026

ஜீ தமிழில் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்: லாஸ்ட் டே ஷூட்டிங் முடிந்ததா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் வீரா, அண்ணா கார்த்திகை, தீபம் மற்றும் பாரிஜாதம் போன்ற சீரியல்கள் பிரபலமாக காணப்படுகின்றன.

இந்த நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வீரா' சீரியல் நிறைவுக்கு வர உள்ளது. இதற்கான இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இதில் நடித்துள்ள பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அண்ணன்-தங்கை பந்த பாசத்தை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. தனது அண்ணனை விபத்தில் கொன்றவரை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும் நோக்கமே தங்கைகளுக்கு காணப்பட்டது. இதுதான் இந்த சீரியலின் மையக் கதை ஆகும்.


பல திருப்பங்களுக்கு மத்தியில், தனது அண்ணனை விபத்தில் கொன்றவளை கண்டுபிடித்து தங்களுடைய நோக்கத்தை சகோதரிகள் நிறைவேற்றிக் கொண்டனர்.

மேலும், இந்த சீரியலில் நடித்த வைஷ்ணவி, அருள்மொழி, அருண், நடிகை சுபிக்ஷா ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அத்துடன் அவர்கள் அடுத்தடுத்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என முன்னோக்கி செல்வதால், இந்த சீரியலை முடித்ததாகவும் பேசப்பட்டது.


Advertisement

Advertisement