• May 15 2026

துரந்தர் 2 வேற லெவல்.! - தியேட்டருக்கே வந்து ரசித்த தோனி.. குஷியில் ரசிகர்கள்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படங்களில் ஒன்றாக திகழ்கிறது துரந்தர் 2. இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில், முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இந்த இரண்டாவது பாகம், மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.


படம் வெளியான முதல் நாளிலிருந்தே இந்தியா முழுவதும் நல்ல ஓப்பனிங் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிரடி காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ரன்வீர் சிங்கின் ஆற்றல்மிக்க நடிப்பு ஆகியவை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன. இதனால் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களிலும் ரசிகர்கள் இந்த படத்தை பாராட்டி பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்திற்கு கிடைத்துள்ள பிரபலங்களின் ஆதரவும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நாயகனுமான மகேந்திர சிங் தோனி இந்த படத்தை திரையரங்கில் பார்த்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வந்துள்ள அவர், ஓய்வு நேரத்தில் திரைப்படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் உள்ள பிரபலமான சத்யம் சினிமாஸ் திரையரங்கில் தோனி “துரந்தர் 2” படத்தை ரசித்துள்ளார். திரையரங்கிற்கு வந்திருந்த ரசிகர்கள், தோனியை நேரில் கண்டதில் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். 

Advertisement

Advertisement