• May 28 2026

கோமதியை நேரில் சென்று அவமானப்படுத்திய மயில்.. கோபத்தில் கத்திய சரவணன்.! டுடே எபிசொட்

shali / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி வீட்டுக்கு வந்திட்டுப் போறதைப் பார்த்த மயில் உடனே உள்ள வந்து பாக்கியத்தைப் பார்த்து அவங்க எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்திட்டுப் போறாங்க என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியம் சும்மா தான் வந்தவங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட மயில் சும்மா எல்லாம் வரமாட்டாங்க என்கிறார். பின் பாக்கியம் கையில இருக்கிற பணத்தைப் பார்த்த மயில் எதுக்காக அவங்க கிட்ட வாங்கின என்று சொல்லிப் பேசுறார்.

மேலும், நீ அந்தப் பணத்தை வாங்கியிருக்க கூடாது என்கிறார். மறுபக்கம் கோமதி இல்லாத நேரம் அரசி செய்து கொடுத்த சாப்பாடு நல்லாவே இல்ல என்று சரவணன் கிண்டல் பண்ணுறார். அந்த நேரம் பார்த்து மயில் அங்க வந்து நீங்க கொடுத்த பணம் எனக்கு வேணாம் என்று சொல்லி கோமதி கையில கொடுக்கிறார்.


அதுக்கு கோமதி இது உனக்காக கொடுத்த பணம் இல்ல உன்ர குழந்தைக்காக கொடுத்தது என்கிறார். அதுக்கு மயில் தெரியும் தான் ஆனாலும் எனக்கு இந்த பணம் வேண்டாம் என்கிறார். பின் என்னோட பிள்ளைக்கு என்ன தேவையோ அதை எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன் என்கிறார் மயில்.

அதைத் தொடர்ந்து சரவணன் மயிலுக்கு காசு எதுக்கு கொடுத்தனீ என்று சொல்லிப் பேசுறார். பின் சரவணன் அஞ்சலிக்கு போன் எடுத்து மயில் செய்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட அஞ்சலி உன்ர வீட்டில இருக்கிறவங்க செய்யுறது சரி நீ தேவையில்லாமல் கோபப்படாத என்கிறார். பின் கதிர் சரவணன் கிட்ட அப்பா , அம்மா செய்யுற நினைத்துக் கோபப்படாத என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement