• May 28 2026

சமந்தா இப்படியும் நடிப்பாரா? ‘மா இன்டி பங்காரம்’ டிரெய்லர் இணையத்தை கலக்க காரணம் இதுதான்!

shali / 1 day ago

Advertisement

Listen News!

சமந்தா கடைசியாக தனது தயாரிப்பில் வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த படத்தை சமந்தா தயாரிப்பதுடன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். குடும்பம், உணர்ச்சி மற்றும் அதிரடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


B. V. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் கெளதமி, திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

1980-களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், சமந்தா அமைதியான குடும்ப மருமகளாக தோன்றுவதுடன், சூழ்நிலைகளுக்கு எதிராக போராடும் தைரியமான பெண்ணாகவும் மாறுகிறார். சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில், தற்போது வெளியான டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்ச்சிபூர்வமான குடும்ப தருணங்கள் மற்றும் சமந்தாவின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வருகிற ஜூன் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement