• Jun 19 2026

‘காந்தாரா’ இமேஜை காலி செய்யப் பார்க்கிறதா சத்ரபதி சிவாஜி பயோபிக்? லீக்கான அப்டேட் படுவைரல்

shali / 2 hours ago

Advertisement

Listen News!

தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா’ மற்றும் ‘காந்தாரா 2’ திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் அனுமன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக மற்றொரு பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.


இந்திய வரலாற்றின் புகழ்பெற்ற மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ‘தி பிரைட் ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிவாஜி மகாராஜ் வேடத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சந்தீப் சிங் இயக்கும் இந்த திரைப்படம் தற்போது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமான மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த வரலாற்று காவியத்தின் முதல் பாகம் 2028-ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2029-ஆம் ஆண்டிலும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரிஷப் ஷெட்டியை சிவாஜி மகாராஜாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement