தமிழ் சினிமாவின் அனுபவமிக்க நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகுமார். அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
அந்தப் பேட்டியில் தனது சினிமா வாழ்க்கையை நினைவுகூர்ந்த சிவகுமார், ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு நடிகைகளுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “என்னுடன் நடித்த கதாநாயகிகள் மட்டும் 87 பேர்” என்று அவர் கூறிய தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், தனது நடிப்பு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் மனம் திறந்தார். அதில், என்னுடைய கிராமத்தில் நான் தான் மேற்படிப்பை படித்தேன். அப்படி படிக்காவிட்டிருந்தால் இந்நேரம் சாமியாராக போயிருப்பேன். மேலும் திருமணம் செய்து கொண்டால் ஹீரோ ஆன பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதன்படியே 38 படங்கள் நடித்த பிறகு திருமணம் செய்தேன். அதனால்தான் இப்போது சூர்யாவும் கார்த்திக்கும் இருக்கின்றார்கள் என கலகலப்பாக பேசியுள்ளார்.
சிவகுமார் தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாமல், பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்தவர். குடும்பம் சார்ந்த படங்கள், சமூகக் கதைகள் என பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், பின்னர் ஓவியம் மற்றும் ஆன்மீக செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இந்நிலையில் அவரது இந்த பேட்டி, பழைய நினைவுகளை மீண்டும் ரசிகர்களிடையே கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் சிவகுமாரின் சினிமா பயணத்தைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!