• May 28 2026

ரன்வீர் சிங்கிற்கு இனி வேலை இல்லையா? தொழிலாளர் கூட்டமைப்பின் கடும் நடவடிக்கை.!

shali / 1 day ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகும் ‘டான் 3’ படத்தில் அவர் நடிக்க இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த படத்திலிருந்து விலகியதாக வெளியான தகவல் பாலிவுட் திரையுலகையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.


இதற்கிடையில், ‘டான் 3’ படத்தை விட்டு விலகிய ரன்வீர் சிங், இயக்குனர் ஜெய் மேத்தா இயக்கும் ‘ப்ராளே’ படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவு தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு ரன்வீர் சிங்குக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு பலமுறை நோட்டீஸ் மற்றும் நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டும் எந்த பதிலும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரச்சனை கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வராது என ரன்வீர் சிங் தரப்பில் இருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அவசரக் கூட்டம் நடத்திய கூட்டமைப்பு, இனி ரன்வீர் சிங் நடிக்கும் எந்த திரைப்படங்களிலும் பணியாற்ற மாட்டோம் என ஒருமித்த முடிவை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement