• Apr 17 2026

சூர்யா 45 குறித்து சாய் அபயங்கர் கூறியுள்ள புதிய அப்டேட்..!

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா நடிக்கவுள்ளார்.நீண்ட காலத்தின் பின்னர் இந்த ஜோடி சேரவுள்ளமையினால் ரசிகர்கள் ஒரு பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.


dream warrior pictures நிறுவனம் இப் படத்தினை தயாரித்து வருவதுடன் album பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த பாடகர் சாய் அபயங்கர் அறிமுக இசையமைப்பாளராக பணியாற்றி வருகின்றார். சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதுடன் அவருடன் இணைந்து rj பாலாஜி அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இப் படத்தின் இசையமைப்பாளர் படம் குறித்த அப்டேட் ஒன்றினை வழங்கியுள்ளார். இவர் நேர்காணல் ஒன்றில் பேசும் போது "நான் இப் படத்தின் பாடல்களின் இசையை மிகவும் பார்த்து பார்த்து செய்துள்ளேன் ஏனெனில் இது எனக்கு முதலாவது படம் என்பதால் இதுவே எனக்கு ஒரு அடையாளமாக அமையும் படத்தின் அரைவாசி இசையமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement