தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தற்போது தமிழகத்தின் முதலமைச்சருமான விஜய், பதவியேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் “தமிழக வெற்றிக்கழகம்” என்ற கட்சியை தொடங்கி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை நிறுவியபோது பலர் அதில் தொண்டர்களாக சேர்ந்தனர். அதிலும் விஜயுடன் நடித்தவர்கள், விஜய் ரசிகர்கள் என பல பிரபலங்களும் தங்களை அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜியும் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கு பிறகு விஜயின் முகத்தை தனது மார்பில் பச்சைக் குத்தியும் இருந்தார். இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

எனினும், விஜயின் தீவிர ரசிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகியுமான தாடி பாலாஜி திடீரென அந்தக் கட்சியில் இருந்து விலகினார். அதற்கு பிறகு வேறு கட்சியில் இணைந்தார். இதற்கு காரணமாக, தவெகவுக்கு எவ்வளவு ஆதரவாக பேசியும் தனக்கு உரிய பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதால் விரக்தியில் வேறு கட்சிக்கு மாறியதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அந்தக் கட்சியில் உள்ள இரண்டு தலைவர்கள்தான் முக்கிய காரணம் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் தன்னை விஜய் அருகில் கூட நெருங்க விடவில்லை என்றும், விஜயை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் சொல்லியிருப்பேன் என்றும் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தாடி பாலாஜியின் சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,
“விஜய் சாரோட நண்பன் ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கூட நடித்தவர் இன்னிக்கு CMன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்தக் கட்சியில் எனக்கு பதவி கொடுங்கன்னு நான் கேட்கல. என் நண்பரின் கட்சியில் என்னை வேலை செய்ய அனுமதி கொடுங்கன்னுதான் கேட்டேன். எனக்கும் ஆனந்த் அண்ணாவுக்கும் முரண்பாடு இருந்திருக்கலாம். நாளைக்கே நான் போய் ‘அண்ணே, ஏதோ ஒன்னு பண்ணிட்டேன், மன்னிச்சிடுங்க’ன்னு சொன்னா, ஒன்னும் சொல்ல மாட்டார்” என தெரிவித்துள்ளார்.
Listen News!