• Apr 26 2025

நடிகர் ஸ்ரீயின் நிலைமைக்கு காரணம் இதுதானா..! வெளியான உண்மை இதோ..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் பல ரசிகர்களின் மங்களைக் கவர்ந்த சீரியலான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. கடந்த சில வாரங்களாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், தற்பொழுது அவருடைய நெருக்கமான நண்பர் ஒருவரின் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் அவர் பேசும் போது, " ஸ்ரீ எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என கனவில் கூட நினைக்கவே இல்ல. ஆரம்பத்தில் நான் கூட ஸ்ரீ படத்துக்காகத் தான் உடம்பை குறைத்திருக்கிறாரு என நினைத்தேன். எனினும் பிறகு அவர் வெளியிட்ட ஆடை இல்லாத வீடியோவைப் பார்த்ததும் எனக்கு ஷாக் ஆயிடுச்சு” என்று கூறியிருந்தார்.


அதே நேரத்தில், பலரும் "ஸ்ரீ நல்லா இருக்காரா?" எனத் தன்னிடம் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், இந்தப் பிரச்சனைகளைப் பார்த்து தான் நிறைய நாட்கள் நித்திரையில்லாமல் இருந்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறியதாவது, "ஸ்ரீ நல்லாத் தான் இருந்தவர் எனினும் அவரது வாழ்க்கையில நடந்த ஏமாற்றங்கள் தான் இப்படி ஒரு மனநிலையை உருவாக்கியிருக்கும்." எனவும் கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல், முடிந்தவரை ஸ்ரீயை அந்த நிலைமையிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுப்பேன் எனவும் கூறியிருந்தார்.


Advertisement

Advertisement