• Jun 14 2026

தாமதமாகும் ப்ரேமலு-2.. வேறுபடத்திற்கு டைவர்டானாரா இயக்குநர்.? வெளியான முழுவிபரம் இதோ...

shali / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய சினிமா உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. சிறந்த கதைக்களம், நேர்த்தியான திரைக்கதை, மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பு என அனைத்தையும் சேர்த்த வடிவமாக இந்த உலகம் மலையாள சினிமாவை கொண்டாடி வருகின்றது. குறிப்பாக 2023ம் ஆண்டு, 'ப்ரேமலு' மற்றும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' போன்ற படங்கள் அனைத்து மொழி ரசிகர்களிடையிலும் செம ஹிட் அடித்தன.


இந்த வெற்றிகளின் தொடர்ச்சியாக 'ப்ரேமலு-2' குறித்து உருவான எதிர்பார்ப்பு, தற்போது ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றமாக மாறி வருகின்றது. ஏனெனில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

2023ம் ஆண்டில் வெளியான 'ப்ரேமலு' திரைப்படம், காதலும் காமெடியும் கலந்து உருவாக்கப்பட்ட இளைஞர் திரைப்படமாக இருந்தது. இத்திரைப்படம் மெட்ராஸ் பின்னணி கொண்ட காதல் கதையாய் இருந்தாலும், அதன் நேர்த்தியான கேரக்டர்களின் இயல்பு மற்றும் எமோஷனல் டச் என்பவற்றின் மூலம் இப்படத்தைப் பலரும் ரசித்தனர்.


'ப்ரேமலு' படம் வெளியாகிய சில வாரங்களிலேயே, "ப்ரேமலு-2" குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு உருவானது.

2023-ல் விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில், இயக்குநர் கிரிஷ் ஏ.டி., “2025ம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் ப்ரேமலு-2 படப்பிடிப்பு தொடங்கும்” என உறுதியுடன் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது ஜூன் மாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்பு தொடங்காதது ரசிகர்களிடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement