• Apr 27 2025

மக்களைக் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்த ரஜினிகாந்த்...!எதற்காக தெரியுமா?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா உலகத்தில் மக்கள் நேசிக்கும் தமிழ்த் திரைப்பட நடிகரான ரஜினிகாந்த், சமீபத்தில் ஒரு முக்கியமான விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பொதுமக்களிடையே தேசிய பாதுகாப்பு குறித்தும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் கூறியதாவது, “கடல் வழியாக நாட்டுக்குள் வந்து கிரிக்கெட் விளையாட்டை தடுக்க நினைப்பார்கள்" என்றார். இது, வெறும் நகைச்சுவை கலந்த ஒரு வாசகமாக இல்லாமல், தீவிர எச்சரிக்கையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற ஒரு முக்கிய செய்தியாகவே பார்க்கப்படுகின்றது .


மேலும் ரஜினிகாந்த், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் “சந்தேகத்திற்கிடமாக யாரும் நடமாடினால் அதனை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்!” எனவும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2008ம் ஆண்டு நடந்த மும்பை இந்தியன் போட்டியில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் கடல் வழியாக நடந்தது என்பதனை அனைவரும் மறக்க முடியாத ஒன்று. அதுபோன்று எந்தத் தாக்குதலும் மீண்டும் நடைபெறாதிருக்க எல்லோருடைய பங்களிப்பும் முக்கியமாக காணப்படுகின்றது என்றார். 


Advertisement

Advertisement