• Jun 22 2026

தமிழ் ரசிகர்களை ஏமாற்றிவிட்டேனா? கண்ணீர் மல்க பேசிய நடிகை ஸ்வாசிகா..

shali / 2 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ஸ்வாசிகா, படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் அமோக வரவேற்பால் நெகிழ்ச்சி அடைந்து உருக்கமான நன்றி பதிவை வெளியிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லா தமிழ் மக்களுக்கும் என்னுடைய பெரிய நன்றி. நன்றியைத் தவிர இப்போது என்னால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. என் மீது நீங்கள் காட்டும் அன்பையும் ஆதரவையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் கதாநாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாகி, இத்தனை பெரிய வரவேற்பைப் பெறும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நிஜமாகியுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் இந்த மாபெரும் ஆதரவிற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள் தான். இனி வரும் காலங்களில் இன்னும் பொறுப்புடன் கதைகளைத் தேர்வு செய்து, உங்களை ஏமாற்றாத வகையில் கடினமாக உழைத்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன்." என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்வாசிகாவின் இந்த உணர்வுபூர்வமான பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வரும் நிலையில், 'நூறு சாமி' திரைப்படத்தின் வெற்றியும் படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement