சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ரீலீலா நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் பாடல் காட்சிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. மிகப்பெரிய அளவிலான பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஓம்’ திரைப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக இந்த படத்தில் உள்ள பாடல் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

‘மாரி 2’ படத்தில் தனுஷ் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது போல, இந்தப் பாடலிலும் அதே அளவுக்கு ஆற்றல்மிக்க, வெறித்தனமான நடன அசைவுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மாண்ட செட், அதிகளவிலான நடன கலைஞர்கள், மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்பக் குழுவின் பங்களிப்புடன் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. தனுஷின் ஸ்டைலான நடன அசைவுகள் ரசிகர்களை மீண்டும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகும் போதெல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த பாடல் காட்சியின் தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!