தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து அரசியல் களத்திலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபாவின் மகனாக 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிறந்த அவர், சிறுவயதிலேயே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் தனது தந்தை இயக்கிய 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார்.

திரைப்பட வாழ்க்கையில் உச்சத்தை தொட்ட விஜய், மக்களுக்கான சேவையில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் அரசியலிலும் களமிறங்கினார். இதையடுத்து அவரது அரசியல் பயணமும் ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நடிகர் ஜெய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் நள்ளிரவு 12 மணிக்கு வாணவேடிக்கைகள் வெடித்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Listen News!