• Apr 16 2026

வயது வெறும் நம்பர் தான்... ஸ்டைலிஷான உடையில் கெத்தா போஸ் கொடுத்த ஜோதிகா.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகையாக திகழ்பவர் ஜோதிகா. 90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பு, அழகு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களின் விருப்பமான நடிகைகளில் ஒருவராக மாறினார். 


குறிப்பாக குடும்ப கதைகளில் இருந்து காதல், அதிரடி, பெண்மையைக் கொண்ட கதாபாத்திரங்கள் வரை பல்வேறு வகையான கதைகளில் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, ஜோதிகா சில காலம் திரைப்படங்களில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதாக காணப்பட்டது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் திரை உலகில் இருந்து விலகியிருந்தாலும், ரசிகர்கள் எப்போதும் அவரின் என்ட்ரியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஜோதிகா மீண்டும் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்தார். அவர் தேர்வு செய்யும் கதைகள் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதனுடன், சமூக ஊடகங்களிலும் ஜோதிகா மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள், பயணம் சம்பந்தமான அப்டேட்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவது வழக்கம். குறிப்பாக அவரது எளிமையான தோற்றமும், இயல்பான ஸ்டைலும் ரசிகர்களை அதிகமாக கவர்கின்றன.

இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் அவர் மிக அழகாகவும், இளமையாகவும் காணப்படுகிறார்.

Advertisement

Advertisement