• Apr 16 2026

'பட வாய்ப்புகள் அட்ஜஸ்ட்மென்ட் மூலம் மட்டுமே கிடைக்கின்றன' – பிரபல நடிகை பரபரப்பு புகார்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்ரீ சத்யா, 2015 ஆம் ஆண்டு மிஸ் விஜயவாடா  அழகி போட்டியில்  வெற்றி பெற்று கலை உலகிற்குள் நுழைந்தார். 2016 ஆம் ஆண்டு நடிகர் ராம் பொத்தினேனே நடித்த மேலூர் சைலஜா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், மன்மதது 2 படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகை ஸ்ரீ சத்யா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இவருடைய நடன வீடியோக்கள், ஸ்டைலான புகைப்படங்கள் அவருக்கு என்று தனி ரசிகர் குழுவை உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீ சத்யா அட்ஜஸ்ட்மென்ட் பற்றி மனம் திறந்துள்ளார். அதன்படி,  தான் வெள்ளித்திரையில் ஜொலிக்காமல் போனதற்கான காரணத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

அதில் அவர் கூறுகையில், தான் வெள்ளித்திரையில் நுழைய முயன்ற போது சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் திறமையை விட அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் மட்டுமே பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


பல நேரங்களில் பட வாய்ப்பு குறித்து பேச அழைக்கும் போது அது தொழில்முனை ரீதியாக இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் தவறான உள்நோக்கத்துடன் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய கசப்பான அனுபவங்கள் தான் பெரிய திரையை தவிர்த்து விட்டு கௌரவமான முறையில் வேலை செய்யக்கூடிய சின்னத்திரையை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார்.

இதன் மூலம், ஸ்ரீ சத்யா வளர்ந்து வரும் இளம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தவறுகள் நிகழும் போது தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement