• May 16 2026

தேசபக்தியை இங்கே யார் தீர்மானிக்கிறார்கள்? அமீரின் கருத்தால் இணையத்தில் கிளம்பிய சர்ச்சை

shali / 1 month ago

Advertisement

Listen News!

ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 


ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், ஆக்ஷன் மற்றும் அரசியல் பின்னணியுடன் அமைந்துள்ளதால் திரையரங்குகளில் கவனம் ஈர்த்து வருகிறது. வெளியான முதல் நாளிலிருந்தே இப்படம் வசூலில் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படம் குறித்து நடிகர் அமீர் பகிர்ந்துள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அவர் கூறியதாவது, “துரந்தர் படத்தில் ஒருவர் இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவி அங்கேயுள்ள மக்களை ஏமாற்றி வாழ்ந்தால், அவனை தேசபக்தன் என்று கூறுகிறோம். ஆனால் அதே நபர் நம் நாட்டிற்கு வந்தால், அவன் உளவாளி ஆகிறான். அப்படியானால் தேசபக்தியை யார் தீர்மானிக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை எடுத்துக்காட்டாக கூறிய அவர், “இந்தியாவை ஆதரித்தால் அது தேசபக்தி எனப்படுகிறது. ஆனால் அந்த போட்டியில் விளையாடும் வீரர்களின் திறமையை ரசிப்பதும் தவறாக பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிலும் தேச உணர்வே மேலோங்கி இருக்க வேண்டுமா?” என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

அமீரின் இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரின் கருத்துக்களை ஆதரித்து பேசுகின்றனர்; மற்றவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இப்படம் போலவே, அதனைச் சுற்றியுள்ள கருத்துகளும் தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது.

Advertisement

Advertisement