• May 06 2025

நடிப்பில மட்டும் இல்ல படிப்பிலயும் இவானா ஸ்டார் தான்..! வெளியான சுவாரஸ்யமான தகவல் இதோ..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவானா, தற்பொழுது  தெலுங்கு திரையுலகிலும் தன்னுடைய தடம் பதிக்கத் தயாராக இருக்கிறார். ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இளைய ரசிகர்களின் மனதில் திடமாக இடம்பிடித்த இவர், தற்போது ஸ்ரீ விஷ்ணு நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கிள்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.

2022ம் ஆண்டு வெளியான 'லவ் டுடே' திரைப்படம், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், காதலும், யதார்த்த வாழ்கையும் எப்படி மோதிக்கொள்கின்றன என்பதைக் கூறும் சினிமாவாக ரசிகர்களிடையே பேசப்பட்டது. அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த இவானா, மிகக்குறுகிய காலத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டார்.


இப்போது, அந்த வெற்றியின் பின், இவானா நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கிள்'படம் வருகின்ற 9, 2025 அன்று திரைக்கு வர இருக்கிறது. தெலுங்கு நடிகர் ஸ்ரீ விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். முக்கியமாக, இந்த திரைப்படத்தை மெகா தயாரிப்பு நிறுவனமான ‘கீதா ஆர்ட்ஸ்’ தயாரித்திருப்பது இந்த படத்துக்கே ஒரு மிகப்பெரிய தரத்தை அளித்துள்ளது.

அவர் சமீபத்திய பேட்டியில், “நான் படிக்கிறேன். அதே சமயத்தில் சினிமாவும் செய்ய ஆசை. இரண்டு துறைகளிலும் நான் சமநிலையை பேணி நடக்கிறேன். அதனால் எதிலும் நானே அசந்து விட மாட்டேன்.” என இவானா உருக்கமாகக் கூறியுள்ளார்.

மேலும், "தெலுங்கு சினிமாவில் நடிக்க முடியும் என்ற வரவேற்பைப் பெற்ற இவானா, அதற்கேற்ப தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டுள்ளார். இந்த 'சிங்கிள்' படத்திற்காக மொழியையே கற்றேன். வசனங்களை ரசித்து, அந்த கலாச்சாரத்தோடே புரிந்து கொண்டு நடித்தேன். எனக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணாங்க. நன்றி அவர்களுக்கு,” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement