தமிழ் சினிமாவில் புதுமுகங்களை வரவேற்கும் கலாச்சாரம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அதிகம் பேசப்படுகின்ற நடிகை தான் ருக்மணி வசந்த். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஏஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்நடிகை தற்போது சிவகார்த்திகேயனுடன் 'மதராஸி' படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் பற்றி தற்போது வெளியாகிய தகவல்கள், ரசிகர்களிடையே பெரும் வியப்பையும், மரியாதையையும் உருவாக்கியுள்ளன. அதுஎன்னவென்றால், ருக்மணி வசந்த் ஒரு ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் இந்நடிகையின் தந்தை தீவிரவாத சண்டையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தாய் சமூக சேவையில் ஈடுபடுவதுடன் பல ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவியும் இருக்கின்றார். இந்த தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்களுக்கு அந்நடிகை மீதுள்ள மரியாதை அதிகரித்துள்ளது.
அத்துடன் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மதராஸி’ படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு பெற்றிருப்பது ருக்மணி வசந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.
Listen News!