தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா தற்போது கதாநாயகியாக தமிழ், தெலுங்கு சினிமா பக்கம் அதிக கவனம் காட்டி வருகின்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் உட்பட பல ஹீரோக்களுடன் நடித்து பிரபலமாக காணப்பட்டார். தற்போது ஹன்சிகாவின் கைவசம் மேன்', காந்தாரி, ஆர்.கண்ணன் ஆகிய படங்கள் உள்ளன.
2022 ஆம் ஆண்டு தொழிலதிபரும் ஹன்சிகாவின் நெருங்கிய நண்பருமான சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில், ஹன்சிகாவின் நாத்தனார் ஹன்சிகாவும் அவருடைய அம்மாவும் தன்னை கொடுமைப்படுத்துவதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.
அதாவது ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை முஸ்கானை பிரிந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து தற்போது பிரசாந்த் மனைவியான முஸ்கான் ஹன்சிகா மீதும் அவரது தாயார் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
குறித்த புகாரில் பிரசாந்த் தன் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஹன்சிகா அவருடைய தாயாரும் தங்களுடைய திருமண உறவில் தலையிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மூவரும் இணைந்து விலையுயர்ந்த பரிசுகள், பணத்தைக் கேட்டு சொத்து சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஹன்சிகா மீதும் அவருடைய சகோதரர் மற்றும் தாயார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Listen News!