• May 10 2024

மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி !!

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது (78).படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000க்கும் மேற்பட்ட படங்களில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடிய இவர் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில்வாணி ஜெயராமுக்கு அண்மையில் மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அவரது மறைவிற்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.


மேலும் வாணி ஜெயராமின் உடல் நாளைய தினம் 1மணியளவில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement