விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் ஒரு சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ஒரு சில இடங்களில் சுவாரசியமாக காணப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் உடல்நிலை காரணமாக பாக்கியா வீட்டில் ராதிகா வாடகைக்கு வருகின்றார். இதனால் ஈஸ்வரிக்கும் ராதிகாக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகளும் நடக்கின்றது.
d_i_a
இன்றைய தினம் இடம்பெற்ற எபிசோட்டில், இனியா டான்ஸ் காம்பெடிஷனில் தோற்றத்திற்கு ராதிகா தான் காரணம் என மிகப் பெரிய களேபரமே நடந்தது.
இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்றைய தினம் வெளியான ப்ரோமோவில், இனியா தோற்றுப் போவதற்கு காரணம் நான் தான் என்று ராதிகா கூறியதோடு எல்லாருடைய மனநிலையும் மாறுவதற்கு ட்ரிப் போகலாமா என்று கேட்கின்றார். ஆனாலும் அதற்கு பாக்கியா, எல்லாரும் சம்மதிக்க வேண்டுமே என கூறுகிறார்.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் கேரக்டரில் நடிக்கும் ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோபியுடன் கடற்கரையில் குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் அவர்களுடன் செழியனும் காணப்படுகின்றார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் இனியாவை அசிங்கப்படுத்திவிட்டு கோபியுடன் கொண்டாட்டம் தேவையா? கோபி திருந்தவே மாட்டாரா? என தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். இதோ அந்த வீடியோ..
Listen News!