• Jan 15 2025

டி.ராஜேந்தர் பட நடிகர் மாரடைப்பு காரணமாக திடீர் உயிரிழப்பு! தமிழ்த் திரையுலகில் பேரதிர்ச்சி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கங்கா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கங்காவின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

டி ராஜேந்தரின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவராக வலம் வந்த கங்கா, ஹீரோ உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். அதன்படி  'உயிருள்ள வரை உஷா' படம் இவருக்கு மிகப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.


தமிழ் சினிமாவில் 1980களில் அறிமுகமான இவர்,  ஹீரோ, குணச்சித்திரம் உட்பட பல கேரக்டர்களில் நடித்துள்ளார்.அத்துடன், நடிகர் கங்கா திருமணம் செய்யாமல் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையிலேயே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 



மேலும் அவரது உடல் அவரின் சொந்த ஊரான சிதம்பரம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement