ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் அர்த்திகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் நடிகை அர்த்திகா அதிரடியாக நீக்கப்பட்டு கார்த்திகை தீபம் சீரியலை முடிவுக்கு கொண்டு வந்திருந்த நிலையில் கார்த்திகை தீபம் சீசன் 2 என ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் அர்த்திகா புது சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .
இந்த தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் தனக்கென தனி ரசிகர்களைப் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகி உள்ளார்.
தற்போது புது சீரியலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சன் டீவியில் ஒளிபரப்பாக உள்ள வினோதினி என்ற புது சீரியலில் நடிக்க உள்ளார். இதில் இவர் ஹிரோயினாகவும் ஹிரோவாக கிருஷ்ணா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .மே 26ம் திகதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகவுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
Listen News!