• Jan 18 2025

பிக்பாஸ் சீசன் 7 இன் ரன்னர் அப் மணியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஒரு நாளைக்கு இவ்வளவா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முதல் சீசனிலிருந்தே களைகட்டும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. மொத்தம் 100 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக மற்றவர்கள் எவிக்ட் செய்யப்பட்டனர்.

ஏற்கனவே எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா, அனன்யா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். பிரதீப் ஆண்டனி இருந்தவரை கலை கட்டிய நிகழ்ச்சி அவரது வெளியேற்றத்துக்கு பிறகு சுவாரசியமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மற்ற போட்டியாளர்களும் தங்களால் முடிந்தவரை சுவாரசியமாகவே நகர்த்தி சென்றனர்.


இந்த நிலையில் பிக்பாஸ் ஏழாவது சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மக்கள் அளித்த வாக்குகளின்படி அவர் டைட்டில் வின்னராக வந்திருக்கிறார் என்றும் ரன்னர் அப்பாக மணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மணிசந்திராவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு அவருக்கு 15,000 ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மொத்தம் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த அவருக்கு 15,75,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement