ஒரு
பக்கம் திரையுலகை சேர்ந்த வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் மகன் மட்டும் வித்தியாசமாக
இயக்குனராக அறிமுகம் ஆகிறார் என்பதும் அவரது முதல் படம் குறித்த அறிவிப்பு
சமீபத்தில் வெளியானது என்பதையும் பார்த்தோம்.
அந்த
வகையில் தனுஷ் மகனும் நடிகராக அறிமுகமாகாமல் டெக்னீசியனாக அறிமுகம் ஆகி இருப்பதாகவும் முதல்
படத்தை அவர் முடித்து விட்டதாகவும்
கூறப்படுகிறது.
தனுஷின்
மூத்த மகன் யாத்ரா விரைவில் திரை உலகில் அறிமுகமாவார்
என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஒளிப்பதிவாளர் ஆகி
உள்ளதாக தெரிகிறது. தனுஷ் நடித்து இயக்கியுள்ள அவரது 50வது திரைப்படமான
‘ராயன்’ படத்திற்கு
யாத்ரா தான் ஒளிப்பதிவாளர்,
இதை ரகசியமாக படக்குழுவினர் வைத்திருந்த நிலையில் தற்போது அந்த செய்தி கசிந்து
விட்டதாகவும் இதனை அடுத்து விரைவில்
அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை அறிவிக்க
இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிறுவயதிலிருந்தே
யாத்ராவுக்கு நடிப்பின் மீது விருப்பமில்லை என்றும்
ஆனால் அதே நேரத்தில் ஒளிப்பதிவாளராக
வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது என்றும் தனுஷும் தனது மகனின் ஆசையை
தனது 50வது படத்திலேயே பூர்த்தி
செய்து வைத்து கூறப்படுகிறது.
‘ராயன்’
படத்தின் ஒளிப்பதிவாளராக தனுஷ் மகன் யாத்ரா அறிமுகம்
ஆகி உள்ள நிலையில் இனி
அடுத்தடுத்து மற்ற படங்களிலும் ஒளிப்பதிவாளர்
ஆக வேண்டும் என்பதுதான் அவரது கனவு என்று கூறப்படுகிறது.
யாத்ராவின் அப்பா தனுஷ் ஒரு நடிகர் மற்றும்
இயக்குனர், அம்மா ஐஸ்வர்யா ஒரு இயக்குனர் என்ற
நிலையில் தற்போது அவர் ஒளிப்பதிவாளராகி
இருப்பதை அடுத்து தாத்தா ரஜினி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Listen News!