• Jan 19 2025

பிக் பாஸ் வீட்டில் கொலை மிரட்டல்! எல்லாம் விஜய் டிவியின் டிஆர்பிக்காக தானா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதில் இன்றைய தினம் அர்ச்சனாவும், நிக்சனும் காரசாரமாக வாக்குவாதம் செய்துள்ளனர். அது கொஞ்சம் கொஞ்சமாக முற்றி இப்போது கொலைவெறி தாக்குதலில் முடியும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அர்ச்சனா வினுஷா விவகாரத்தை கையில் எடுத்து நிக்சனுக்கு எதிராக கத்தியது தான். இதன் காரணமாக கடுப்பான நிக்சன் அர்ச்சனாவை பார்த்து காரி துப்பி நீ பெரிய இவளா, சரிதான் போடி, இனி வினுஷா பற்றி கதைச்சா சொருகிடுவேன் என்று சொல்லி கத்தி இருந்தார்.

அதுமட்டுமின்றி, அர்ச்சனாவை அசிங்கப்படுத்தும் விதமாக, நீ எல்லாம் ஒரு ஆளா, பேசாம உப்புமா சாப்பிட்டு ஒக்காந்து இரு, கெட்ட எண்ணம் உள்ள மனுஷங்க என கேவலமாக பேசி இருந்தார்.



எனினும், பிக் பாஸ் வீட்டில் இவ்வளவு அக்கப்போர் நடந்தும் கூட பிக்பாஸ் தலைவர் நிக்சனை தடுத்து நிறுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு காரணம் இதை வைத்தே விஜய் டிவி டிஆர்பியை அதிகரிக்க பிளான் போட்டுள்ளதா? என்ற சந்தேகமும் எழுகின்றது. அதனாலயே இப்படி ஒரு ரவுடித்தனத்தை சேனல் தரப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.



அதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இதுவரை பெண்களை பற்றி அசிங்கமாக வர்ணிப்பதும், காதல் சேட்டைகளில் ஈடுபடுவதும் நிக்சன் ஒருவராகவே காணப்படுகிறார். பிரதீப் விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த பிக் பாஸ் டீம் நிக்சன் விஷயத்தில் பின் வாங்குவது ரசிகர்களை அதிருப்தி செய்துள்ளது.

இதேவேளை, இந்த வாரம் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அர்ச்சனா உரிமைக் குரல் எழுப்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement