பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் சுகன்யாவப் பார்த்து இருந்தாலும் நீங்க மீனா அப்பா கிட்ட பணம் விஷயம் பற்றி சொல்லுவீங்க என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்கிறார். அதுக்கு சுகன்யா நான் ஒன்னும் பொய் சொல்லேல உண்மையை தான் சொன்னான் என்று சொல்லுறார். இதனை அடுத்து ராஜி வீட்ட வந்து அரசியைப் பார்த்து நான் டியூஷன் போட்டு வரும் போது அண்ணனை பார்த்தேன் என்று சொல்லுறார். அதைக் கேட்டு அரசி ஷாக் ஆகுறார்.
பின் மயில் கோமதியைப் பார்த்து நீங்க ரொம்ப மாறிட்டீங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி நான் ஒன்னும் மாறல என்கிறார். இதனைத் தொடர்ந்து கோமதி பாண்டியனைப் பார்த்து கால் சரியாகிற வரைக்கும் ஒரு இடமும் போக வேணாம் என்று சொல்லுறார். பின் பாண்டியன் சரவணன் கிட்ட நம்ம கிட்ட இருக்கிற வயலை வித்திடலாம் என்று சொல்லுறார்.
அதை அடுத்து மீனாவோட அப்பா மீனா வீட்ட நடந்த விஷயத்தையே ஜோசிச்சுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த மீனாவோட அம்மா எனக்கும் பண விஷயத்தை நினைக்க கோபம் தான் வருது என்கிறார். பின் மீனா அங்க போய் பணம் கொடுத்து வேலை வாங்கலாம் என்ற விஷயத்தை செந்திலுக்கு சொன்னதே அப்பா தான் என்கிறார். இதனை அடுத்து மீனா ஏன் பணம் கொடுத்தேன் என்ற விஷயத்தை அப்பாவுக்கு சொல்லுறார்.
பின் குமார் அரசி வீட்டுக்கு வெளியில நிக்கிறதைப் பார்த்தவுடனே கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து கதிரும் அங்க வந்து நிக்கிறார். இதனை அடுத்து கதிர் குமாரைப் பார்த்து எதுக்காக இப்ப அரசியை கூப்பிட்டுக் கொண்டிருக்க என்று கேட்கிறார். பின் சரவணன் மயிலைப் பார்த்து எல்லா விசயத்திலயும் என்ன ஏமாத்திட்ட என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!