• May 11 2024

விக்ரம் படத்தை 48 முறை தியேட்டரில் மட்டும் பார்த்த வெறித்தனமான ரசிகர்!- குவிந்து வரும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுலை மாதம் 3ம் திகதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இப்படம் 90 நாட்களை கடந்தும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்.சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.


மேலும் இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. இதனால் படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.


இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது.இந்நிலையில் சென்னையை சேர்ந்த கமல் ரசிகர் உதயபாரதி என்பவர் விக்ரம் படத்தை ரிலீசான நாளில் இருந்து 48 முறை தியேட்டரில் மட்டும் பார்த்து உள்ளார். சமீபத்திய 90வது நாளில் பிவிஆர் திரையரங்கில் 48வது தடவையாக விக்ரம் படத்தை கண்டுகளித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த ரசிகர் வெளியிட்டுள்ளார். இதனைத் பார்த்த கமல் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement