• Dec 04 2024

பிக் பாஸ் வீட்டுக்குள் மூட்டைப்பூச்சி.?? ஆர்வக் கோளாறை சுட்டிக் காட்டிய சவுண்டு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் பெண்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கும், ஆண்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பெயர் வைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. 

அதன்படி கருத்து கந்தசாமி என்ற பெயரை முத்துக்குமரனுக்கு வைக்கின்றார்கள்.  இதைக் கேட்டு சகப் போட்டியாளர்கள் ஆரவாரம் செய்கின்றார்கள்.

d_i_a

இதைத்தொடர்ந்து சாச்சனாக்கு ஆர்வக்கோளாறு என்ற பெயரை சௌந்தர்யா வைக்கின்றார். மேலும்   மூட்டைப்பூச்சி என்ற பெயரை சௌந்தர்யாவுக்கு விஷால் கொடுக்கின்றார்.


மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட்டாக உள்ளே வந்த வர்ஷினிக்கு மண்டைக்குள்ள எதுவும் இல்லை என்று சுனிதா சொல்கின்றார். அதை திறந்து பார்த்தீர்களா என வர்ஷினி  கேட்க, அதை ஏன் துறந்து பார்க்கணும்.. அதுக்கு அவசியமே இல்ல பார்த்தாலே புரியுது என்று சுனிதா சொல்கின்றார்.

அதே போல கார்பன் பேப்பர் என வர்ஷினிக்கு ஜாக்குலின் பெயர் வைக்கின்றார். ஏன் என்று கேட்க, நீங்க சௌந்தர்யா போல இருக்கணும் என்று நினைக்கிறீங்க.. ஆனால் சௌந்தர்யா போல நீங்க இல்லை என ஜாக்குலின் சொல்லுகின்றார். இதைக் கேட்டு ஏனைய போட்டியாளர்களும் கைதட்டுகின்றார்கள்.

Advertisement

Advertisement