• Jan 19 2025

விஜயுடன் ஜோடி போட்டு நடனமாடிய பிக்பாஸ் பிரபலம்! அப்பவே மாஸ் காட்டிய வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் விசித்ராவும் ஒருவராக காணப்படுகிறார். தற்போது இவர் விளையாடும் முறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அத்தோடு சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்குமளவுக்கு இவர் விளையாடி வரும் ஸ்ராட்டஜியும் நன்றாக உள்ளது. இதன் காரணமாகவே இருவருக்கு ஏராளமான ரசிகர் வட்டாரம் உண்டு.

மேலும், தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல், எங்க முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 


100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார். இவர் தற்பொழுது பிக்பாஸ சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.


இவ்வாறு, சினிமாத் திரையுலகில் பல டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்த நடிகை விசித்ரா, சில பாலியல் துன்புறுத்தின் காரணமாக சினிமாவில் இருந்து விலகினார் என பிக் பாஸ் வீட்டில் கூறி அனைவரையும் அதிரவிட்டார். 


இந்த நிலையில், தளபதி விஜய் உடன் விசித்திரா இணைந்து  ஆடியபாடலின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.  அதன்படி, விஜய் நடிப்பில் உருவான ரசிகன் படத்தில் வரும் 'ஆட்டோ ராணி' என்ற பாடலில் விஜயும் விசித்ராவும் ஜோடி போட்டு அடியுள்ளனர்.இதோ அந்த பாடலின் வீடியோ....


Advertisement

Advertisement