• Nov 06 2024

நெருங்கும் அமரன் ரிலீஸ்! வைரலாகும் ஏஷ் #டேக்! வேதனையில் சாய்பல்லவி!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

அமரன் படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நாளை மறுநாள் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி. இந்நிலையில் சாய் பல்லவி படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி #BoycottSaiPallavi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.


முன்னதாக தெலுங்கு படத்தை விளம்பரம் செய்ய அளித்த பேட்டியில் சாய் பல்லவி பேசியது பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோவை தான் தற்போது ஷேர் செய்து சாய் பல்லவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தான் பேசியது பெரும் சர்ச்சையானதை பார்த்த சாய் பல்லவி பின்னர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது,


சமீபத்திய பேட்டியில் நான் இடது சாரியா, வலது சாரியா என கேட்டார்கள்.நான் நடுநிலையானவள் என்றேன். நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்றேன். காஷ்மீரி ஃபைல்ஸ் படம் பார்த்து அந்த இயக்குநரிடம் பேசினேன். அந்த படத்தில் நடந்த கொலைகளை நான் சிறுமைபடுத்தி பேசவில்லை. வன்முறை தவறு என நினைப்பவள் நான் என்றார்.


பழைய வீடியோவை தற்போது டிரெண்டு செய்து வருவதுடன், சாய் பல்லவியை போய் சீதாவாக நடிக்க வைக்கிறார்கள். இது தவறானது ஆகும். வேறு ஆளே இல்லை என இந்தி ராமாயணத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்கிறார்களா என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். #BoycottSaiPallavi  இந்த விடையம் தற்போது வைரலாகி  வருகிறது.




Advertisement

Advertisement