பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி ஈஸ்வரிட சொந்தக்காரங்க வராங்கனு சொல்லுறீங்க எதுக்கு வராங்க என்று கேக்கிறான். அதுக்கு ஈஸ்வரி இனியாவ பொண்ணு பாக்கத் தான் வராங்கனு சொல்லுறார். இதைக் கேட்டவுடனே கோபி ஷாக் ஆகுறார். பிறகு இவளவு சீக்கிரம் நம்ம இனியாவுக்கு கலியாணம் பண்ணணுமோ என்று கேக்கிறான். இதைக் கேட்ட ஈஸ்வரி அவ கலியாணத்த அவளே யோசிச்சிட்டாள் நாம யோசிக்கக் கூடாதோ என்று கேக்கிறார்.
பிறகு பையன் நல்லவன் இனியாவுக்கு பொருத்தமா இருப்பான் என்கிறார். பின் கோபி அம்மா இப்ப இதைப் பத்தி கதைக்க வேணாம் கொஞ்ச நாள் போகட்டும் என்கிறான். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி கோபியைப் பாத்து சரி கலியாணத்தைப் பின்னுக்கு வைக்கலாம் ஆனா இனியா அதுக்கு முன்னம் அந்த ஆகாஷைக் கலியாணம் செய்திட்டு வந்து நின்னா என்ன பண்ணுவ என்று கேக்கிறார்.
இதைக் கேட்ட கோபி அம்மா பிளீஸ் சும்மா பேச்சுக்கு கூட அப்படி எல்லாம் சொல்லாதீங்க என்கிறான். பின் ரெண்டு பேரும் கதைச்சு ஒரு மாதிரி ஈஸ்வரி கோபியின் மனத மாத்திட்டாள். பிறகு கோபியும் மாப்பிளை வீட்டுக்காரர் வாறதுக்கு சம்மதம் சொல்லுறான். இதைக் கேட்டு ஈஸ்வரி சந்தோசப்படுறாள்.
பிறகு சொந்தக்காரங்க வந்தவுடன எல்லாரும் அவங்களோட இருந்து கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவங்க இனியாவ பொண்ணு பாக்க வந்திருப்பது தெரிஞ்சு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பிறகு பாக்கியா ஈஸ்வரிய தனியா கூப்பிட்டுக் கதைக்கிறாள். பின் நாளைக்கே நிச்சயதார்த்தத்தை வைக்க ஈஸ்வரி பிளான் பண்ணுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!