• Mar 17 2025

அஜித் குமாரின் ஸ்பீச் தான் எங்களுக்கு பூஸ்ட்..! மகிழ் திருமேனி கொடுத்த சர்டிபிகேட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி - அஜித் குமார் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் மங்காத்தா டீம் திரிஷா, அர்ஜுன் இணைந்து உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சி படம் தொடர்பிலும் அஜித் குமார் தொடர்பிலும் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி பேட்டி கொடுத்துள்ளார். தற்போது அவருடைய பேட்டி வைரலாகி வருகிறது.

d_i_a

அதில் அவர் கூறுகையில், இந்த படம் கடந்த 2024ம் ஆண்டு பொங்கலுக்கே வர வேண்டியது. ஆனாலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.


இந்த ஆண்டு கூட பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸாக இருந்தது. ஆனாலும் அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போகவே ரொம்ப அப்செட் ஆகிவிட்டேன். ஆனாலும் அஜித் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிடல என்றா என்ன.. நாங்க படத்தை ரிலீஸ் பண்ணுற நாள் தான் பண்டிகையா இருக்கும் என தெரிவித்தார்.

அஜித் குமார் ரொம்ப பொறுமைசாலி. இந்த படம் நடக்கணும் என்பது அவருடைய பெரிய ஆசை. ஒவ்வொரு முறையும் நானும் சரி படக்குழுவினரும் சரி சற்று மனம் தளரும் போதும் அவரின் வார்த்தைகள் தான் எங்களுக்கு தைரியம் கொடுக்கும். அவருடன் உட்கார்ந்து பேசினால் டைம் போறதே தெரியாது.

Advertisement

Advertisement