• May 18 2024

இன்னும் 18 நாள் தான் படப்பிடிப்பு.. ஒருவழியாக ‘விடாமுயற்சி’யை முடிக்கிறார் அஜித்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!


அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இடையில் சில பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அஜித் இந்த படத்தில் கமிட்டாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆக இருக்கும் நிலையில் இன்னும் படப்பிடிப்பு முடியாமல் இருப்பது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து கொண்டிருந்த நிலையில் தட்பவெப்ப நிலை காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் அதனை அடுத்து வேறு நாட்டில் இந்த படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நாயகி த்ரிஷாவின் கால்ஷீட்டை படக்குழுவினர் வேஸ்ட் செய்து விட்டதால் அவரது கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் சில நாட்கள் படப்பிடிப்பு  தள்ளி போனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென லைகா நிறுவனத்திற்கு பொருளாதார பிரச்சினை என்றும் அதன் காரணமாகவும் படப்பிடிப்பு தள்ளி போனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.



இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80% முடிந்து விட்டதாகவும் இன்னும் 18 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் அதன் பிறகு அஜித் இந்த படத்தில் டப்பிங் பணியை மட்டும் செய்துவிட்டு அடுத்த படத்திற்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் லைகா நிறுவனத்தின் படத்தில் நடிப்பது தனக்கு பெருமையாக இருந்தது என அஜித், தனது தரப்பினரிடம் கூறிவந்த நிலையில் தற்போது ஏன் இந்த படத்தில் ஒப்புக்கொண்டோம் என்று அவர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் அஜித் படத்தை தயாரிப்பது தங்கள் நிறுவனத்துக்கு பெருமை என்று நினைத்துக் கொண்டிருந்த லைகாவும் இந்த படத்தை ஏன் தொடங்கினோம் என்ற நிலையில் தான் உள்ளதாகவும் இரு தரப்பும் அதிருப்தியில் இருப்பதால் இந்த படம் எப்படி வரும் என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இயக்குனர் மகிழ் திருமேனி தனது முழு திறமையை இந்த படத்தில் செலுத்தி உருவாக்கி வருவதால் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement