• May 11 2024

மீண்டும் திரையுலகில் எண்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் ராமராஜன்...வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் 80களில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன்.இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றுள்ளது. அத்தோடு அப்போதெல்லாம் ராமராஜன் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் ரசிகர்கள் அதிகம் குவிவதும் தெரிந்ததே.

மேலும் வெற்றி படங்களை கொடுத்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் பெரிய அளவில் கதைகள் கவனம் செலுத்தாததால் ஒரு சில தோல்விப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் நடிப்பதை விட்டு விட்டு மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.


1989ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேல் திரையரங்கில் ஓடி பல சாதனைகள் படைத்தது.

கடந்த பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகர் ராமராஜன் தற்போது மீண்டும் திரையுலகில்  என்ட்ரி கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.



அதாவது மறுபடியும் ஹீரோவாக நடிக்கப்போகின்றாராம்.ஆம், தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் தான், ராமராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement