• Jan 19 2025

மிக எளிமையாக நடந்து முடிந்த வெற்றி வசந்த் - வைஷு என்கேஜ்மென்ட்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்ததன் மூலம் இணைந்த ஜோடிகள் ஏராளம். அந்த வரிசையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் நாயகனும் பொன்னி சீரியல் நாயகியும் காதலில் விழுந்துள்ளார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அதைப்போல பொன்னி சீரியல் பிரபலமாக காணப்படுகின்றது . சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த் குறுகிய காலத்துக்குள்ளையே தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் .


சமீபத்தில் வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது பொன்னி சீரியலில் நடிக்கும் வைஷு சுந்தருக்கும் தனக்கும் இந்த வாரத்திற்கு உள்ளேயே எங்கேஜ்மென்ட் நடக்க உள்ளது என்று.. இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது எங்கேஜ்மென்ட் செய்ய உள்ளார்கள் என்ற தகவலை  பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் வெற்றி வசந்திற்க்கும் வைஷ்ணவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததோடு ரசிகர்கள் பலரும் அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய தமது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.


Advertisement

Advertisement