• May 10 2024

நாமினேட் செய்யும் போட்டியாளர்கள்... அசால்ட்டாக ஜனனியை முத்தமிட்ட அசல்... வெளியானது முதல் ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இந்நிகழ்வானது தற்போது இரண்டு வாரங்களை வெற்றிகரமாக கடந்து இருக்கின்றது.


இந்நிலையில் வார இறுதியில் இந்நிகழ்ச்சியிலிருந்து ஒருவரை வெளியேற்றுவது வழமை. அந்தவகையில் நேற்றைய தினம் சாந்தி வெளியேறி இருக்கின்றார்.

இருப்பினும் இதில் ஜிபி முத்து தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னுடைய விருப்பத்தின் பேரில் விலகி சென்று விட்டார். மிச்சமாக 19 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் எஞ்சி உள்ளனர்.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ ஆனது வெளியாகி இருக்கின்றது. அதில் போட்டியாளர்களின் நாமினேஷன் லிஸ்ட் இடம்பெறுகின்றது.

அந்தவகையில் குயின்ஷி ரச்சிதாவை நாமினேட் பண்ணி இருக்கின்றார். அசல், adk ஆகியோர் ஆயிஷாவையும் நாமினேட் பண்ணி இருக்கின்றனர். ஆயிஷா, விக்ரம், ரச்சிதா ஆகியோர் அசீமையும், அசல், மைனா ஆகியோர் மஹேஸ்வரியையும், ஆயிஷா, தனலட்சுமி ஆகியோர் அசலினையும் கூறி இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது அசல் ஜனனியின் கன்னத்தில் முத்தமிடும் வகையிலும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கின்றது. எது எவ்வாறாயினும் சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். யார் யார் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறுகின்றார்கள் என்பதை.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ...!


Advertisement

Advertisement

Advertisement