• Jan 19 2025

விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் வானில் நிகழ்ந்த அதிசயம்!பிரேமலதா உட்பட ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் கைகூப்பி வணங்கிய வைரல் வீடியோ இதோ..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்தது இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பிரிவை எண்ணி விஜயகாந்தின் குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் நாடுமே கேப்டன் இல்லாமல் தவிக்கின்றது.

இவ்வாறு உயிரிழந்த நடிகர் விஜயகாந்தின் பூதவுடல் நேற்றைய தினம்  காமராஜர் சாலையில் உள்ள தீவுத்திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியதோடு, 72 குண்டுகள் முழங்க அவரின் உடலுக்கு அரச மரியாதையும் செய்யப்பட்டு, மக்களின் கண்ணீருடன் அவரது உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது.


மேலும், தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில், அவருக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளதாகவும், நடிகர் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கருடன் வானில் வட்டமிட்ட சம்பவம் அங்கிருப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.


அதன்படி, நேற்றைய தினம் விஜயகாந்தின் உடல் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்து சென்ற போது கருடன் வானில் 3 முறை வட்டமிட்டது. 

இதைப் பார்த்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் உட்பட அங்கிருந்த மொத்த கூட்டமும் கருடனை கைகூப்பி வணங்கியுள்ளனர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement