• Jan 18 2025

4 நாட்களில் 100 கோடி ரூபா வசூல்... பிரம்மாண்ட சாதனையை புரிந்த படம் எது தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தைப்பொங்கல் தினத்தையொட்டி வெளியான படங்களில் அமைதியாக  வசூல் சாதனை செய்து வருகிறது ஹனுமான் படம். 

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த 12ம் திகதி வெளியான படங்களில் ஒன்று தான் ஹனுமான். குறித்த படம் தற்போது மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. 

குறித்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது.



இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக படக்குழுவினர் மற்றும் நாயகன் தேஜா சஜ்ஜா தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த படத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பும் அதிகமான பாராட்டுக்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement