• Jun 27 2024

கள்ளசாவுக்கு எதுக்கு நல்லசாவு? 10 லட்சம் நிவாரண நிதிக்கு எதிராக பார்த்திபன் போர்க்கொடி

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அரசியல் தலைமைகள் முதல் ஒரு சில சினிமா நட்சத்திரங்களும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 43 பேர் உயிர் இழந்துள்ளதுடன் 120 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதில் முப்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறையினரின் மெத்தனப் போக்கு தான் கள்ளச்சாராய விற்பனை நடைபெற காரணமாக அமைந்ததாகவும், அதனால்தான் இத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுவதாகவும் அரசியல் தலைமைகள் முதல் சினிமா பிரபலங்களும் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது பிரபல நடிகரும் இயக்குரனுமான பார்த்திபன் கள்ளசாவுக்கு எதுக்கு நல்ல சாவு என ட்விட் போட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.

அதாவது இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே பார்த்திபன் இப்படி ஒரு போஸ்ட்டை போட்டுள்ளார்.

Advertisement

Advertisement