சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் நடிகை சங்கீதா. இவர் சீரியல் நடிகையாக மட்டும் இல்லாமல் டாக்டராகவும் பிரபலமாக காணப்படுகின்றார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்கச்சியாக சீதா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை சங்கீதா. இந்த சீரியலில் இவரது கேரக்டர் பலராலும் வரவேற்பை பெற்ற ஒரு கேரக்டராக காணப்படுகின்றது.
அதற்கு காரணம் மீனாவின் அம்மா பூக்கட்டி தனது பிள்ளைகளை படிக்க வைத்த நிலையில், அவருக்கு பக்கத்துணையாக இருந்து படிப்பு, வேலை என எல்லாவற்றையும் சமாளித்து வருகின்றார். அத்துடன் தவறான வழியில் சென்ற தனது தம்பிக்கு மீனாவுக்கு அடுத்த நிலையில் இருந்து நல்ல புத்திமதிகளை எடுத்துச் சொல்லும் ஒரு அக்காவாகவும் காணப்படுகின்றார்.
இந்த சீரியலில் மீனாவின் தங்கச்சி சீதாவை பெண் கேட்டு வந்தார்கள். ஆனாலும் அதன் பின்பு சத்யாவின் வீடியோ இணையத்தில் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து அவர்கள் அந்த சம்பந்தத்தை தவிர்த்து விட்டார்கள். ஆனாலும் சீதா தனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்ற மனநிலையில் சந்தோஷமாக காணப்படுகின்றார்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் சங்கீதா தனது இன்ஸ்டா பக்கத்தில் புஷ்பா 2 பட பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீனாவின் தங்கச்சி என்ன இந்த ஆட்டம் ஆடுகிறார் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். அதில் அவர் உடுத்திய ஆடையும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ...
Listen News!